Categories
தேசிய செய்திகள்

பண்ணுறத பண்ணிட்டு இப்போ பேச்சுவார்த்தையா ? இந்தியாவை அழைக்கு நேபாளம் …!!

ஏற்பட்டிருக்கும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேபாள அரசு அழைப்பு விடுத்துள்ளது

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிம்பியதுரா, காலாபனி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்களது எல்லைக்கு உட்பட்டதாக சித்தரித்த நேபாள  அரசு கடந்த மாதம் புதிதாய் வரைபடம் ஒன்றை வெளியிட்டது. இதனை ஏற்று அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று ஒருமனதாக நிறைவேறியது. இது நேபாள-இந்திய நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேபாளம் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு முன்னாள் பிரதமரும் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான புஸ்பா கமல் தாஹால் இந்தியாவுடன் இருக்கும் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் செய்துள்ளோம். இந்தியாவுடன் விரோதத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |