தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கடலூர், தூத்துக்குடி, அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை – 1,415, செங்கல்பட்டு – 178, திருவள்ளூர் – 81, திருவண்ணாமலை – 35 பேர், காஞ்சிபுரம் – 32, ராமநாதபுரம் – 23, நெல்லை – 21, விழுப்புரம் – 16, மதுரை – 16, தென்காசி – 16, சிவகங்கை – 15, கள்ளக்குறிச்சி – 14 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் – 11, சேலம் – 10, திருச்சி – 9 , வேலூர் – 9, தேனி -8, திருவாரூர் – 8, நாகை – 7, விருதுநகர் – 7, ராணிப்பேட்டை – 6, கோவை – 3, தஞ்சை – 4, திருப்பத்தூர் – 2, கன்னியாகுமரி – 2, தருமபுரி, கரூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூரில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.