Categories
அரசியல்

சார்! நாங்க ரெடி… கொரோனா டியூட்டி போடுங்க… மாஸ் காட்டிய செவிலியர்கள்…. புகழ்ந்து தள்ளிய விஜயபாஸ்கர் ….!!

தமிழக மருத்துவமனையில் உள்ள செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர்  ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,

முதல்வர் நேரடி கண்காணிப்பு:

எந்த சூழ்நிலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயாராக இருக்கிறது. நோயை கட்டுப்படுத்துவதில் தனி மனிதனின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும், இயல்பு வாழ்க்கையும் இருக்க வேண்டும். இதனால் மருத்துவ குழுவினரின் ஆலோசனை பெற்று தான் முதல்வர் ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருகின்றார். முதல்வரின் நேரடி கண்காணிப்பில் அனைத்துதுறையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது.

சோதனையில் நம்பர் ஒன் :

இயற்கை பேரிடர் காலத்தில் சர்வீஸ் செய்யக்கூடிய மருத்துவர்கள் பாசிட்டிவான பிறகு குணமடைந்து பணிக்குதிரும்பியுள்ளனர்.பாசிட்டிவான காவல்துறை அதிகாரிகள் திரும்ப நெகடிவ் ஆகி பணிக்கு திரும்பியுள்ளனர். இந்த மாதிரி சேவை செய்து கொண்டு இருக்கின்ற போது எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. விமர்சனம் கொண்டு வருவது , கேள்வி எழுப்புவது என்பது எளிது. இரவு பகல் பாராமல் கடுமையாக பணியாற்றக் கூடியவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். முதலமைச்சர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முடிவுகளை திறம்பட எடுத்துள்ளார். இந்தியாவிலே அதிகமான சோதனை நாம் தான்.

புதிய நியமனம்:

முதலமைச்சர் இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறைக்கு கேட்கின்ற எல்லா மனித வளங்களையும் கொடுத்துள்ளார். மருத்துவர், ஸ்பெஷாலிட்டி டாக்டர், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன், பரா மெடிக்கல் ஸ்டாப், ஸ்டாப் நர்ஸ் என பலரையும் நியமனம் செய்துள்ளோம். கொரோனாவில் தாக்கம் தொடங்கியதற்கு பின்னால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உட்பட மொத்தமாக மருத்துவர்கள், பணியாளர்கள் சேர்த்து 12 ஆயிரத்து 480 பேர் பணி நியமனம் செய்துள்ளோம்.

என்னிடம் கேட்கிறார்கள்:

இன்னும் செவிலியர்கள் கூடுதலாக கேட்டதனால் நேற்று 2,000 பேர் தற்காலிகமாக, ஆறு மாதத்திற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு அவர்களும் உடனடியாக பணியில் சேர்ந்து வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு பேரிடர் காலத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்து ஒரு நாள், ரெண்டு நாள்  காலம் தாமதிக்காமல் பணியில் சேருவதற்கு ஆர்வமா இருக்காங்க. சார் கொரோனா டியூட்டி என்ன  போடுங்க, நான் ஒரு நாள் டியூட்டி பாக்குறேன். எனக்கு இந்த வாரமே போடுங்க அப்படின்னு அவுங்க கேட்கக் கூடிய அளவுக்கு தான் இருக்காங்க.

பலமுறை சொல்லுறோம்:

டெஸ்ட்டிங் லேப் அதிகரித்துளோம், படுக்கைகளை உயர்த்தியுள்ளோம். எந்த மருந்தும் தட்டுப்பாடு இல்லாதவாறு வைத்துள்ளோம். மருத்துவ ஆராய்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது. பிளாஸ்மா தெரபி நமக்கு நல்ல பலன் கொடுத்துள்ளது. பல மாவட்டங்களில் இறப்பு இல்லாத நிலையை உருவாகியுள்ளோம். பலமுறை சொல்கின்றோம் வயது முதிர்ந்தவர்கள் , இன்னும் பிற நோய் உடையவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை வியாதி,ரத்த கொதிப்பு உள்ளவர்கள் சரியாக மருந்தை உட்கொள்ள வேண்டும்.

நோய்களில் அரசியல் செய்யக்கூடாது:

92 வயதில் பாட்டியை குணப்படுத்தி உள்ளோம். மூன்று நாள் ஆன குழந்தையை குணப்படுத்தி உள்ளோம். கர்ப்பிணிகள், கேன்சர் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்துள்ளோம். இப்படி நிறையாக சர்விஸ் செய்யும் போது தயவு செய்து இதில் அரசியல் கட்சிகள் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விமர்சனம் செய்வதற்கான நேரமும் அல்ல… விமர்சனம் செய்வதற்கான காலமும் அல்ல… விமர்சனம் செய்வதற்கான களமும் அல்ல… நோய்களில் அரசியல் செய்யக்கூடாது அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Categories

Tech |