Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா..!! மகனை திருமணம் செய்து கொண்ட 65 வயதான பெண்!

இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகனை  65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் 65 வயதான காம்ப்ரெங் என்ற பெண் கடந்த ஆண்டு ஆர்டி வாரஸ்  என்ற 24 வயதான இளைஞனை தத்தெடுத்து கொண்டார். காம்ப்ரெங் ஏற்கனவே 3 இளம்பெண்களை தனது மகள்களாக தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் தனது வளர்ப்பு மகனாக ஆர்டி-ஐ , காம்ப்ரெங் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து காம்ப்ரெங்(65)  கூறுகையில், எனக்கு முதலில் ஆர்டி-ஐ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை.  நான் அவரிடம் நீ சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறினேன், அதற்கு அவர் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா என என்னிடம் காதலை சொன்னார்.

இதையடுத்தே நாங்கள் இருவரும் மணந்து கொண்டோம் என கூறியுள்ளார். இந்தோனேசிய இஸ்லாமிய திருமணத்தின் வழக்கப்படி மணமகன் மணப்பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். அதன்படி  வரதட்சணையாக கொடுத்திருக்கிறார்.

இந்தோனேசியாவில் இது போன்ற அதிக வயது வித்தியாசம் உள்ள  தம்பதிகள் திருமணம் செய்து கொள்வது புதியதல்ல.

Categories

Tech |