மேஷ ராசி அன்பர்களே …! இன்று பிரபலங்களின் சந்திப்பு பெருமை கூடும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்களுடைய நிலைமை இன்று மாறும். நீங்கள் விரும்பி கேட்டதை பெற்றுக்கொள்ளலாம்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடிய சூழல் இருக்கும். அதேபோல கன்சல்டன்ஸி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இரக்கம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இடமும் அன்பாகவே நடந்து கொள்வீர்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது . ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்.