8 வாரங்களில் 1.04 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ தளத்தில் பெற்றுள்ளது
முன்னணி தொலைதொடர்பு நிர்வாணமாக இருந்து வரும் ஜியோ இணையதள வர்த்தகத்தில் ஜியோஸ்மார்ட் என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. இச்சூழலில் ஜியோவில் உலகில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.அவ்வகையில் நுகர்வோர் தயாரிப்புகளில் அதிக முதலீடுகளை செய்த எல். கேட்டர்டான் நிறுவனம் 1,894.50 கோடி முதலீடை ஜியோவில் செய்துள்ளது. இதன் மூலமாக 0.39 சதவீத பங்குகளை ஜியோவிடமிருந்து அந்நிறுவனம் வாங்கியுள்ளது.
எல். கேட்டர்டான் நிறுவனம் வாங்கிய பங்கின் மதிப்பு 4.11 லட்சம் கோடி நிறுவனத்தின் மதிப்பு 5.16 லட்சம் கோடியாகவும் இருக்கின்றது. இந்நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்யும் பத்தாவது நிறுவனம் ஆகும். இணையவழி சந்தைப்படுத்துதலை கருத்தில்கொண்டு உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் 1,04,326.65 கோடி முதலீடு ஜியோ நிறுவனத்தில் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள்
- ஏப்ரல் 22 அன்று ரூபாய் 43,574 கோடியை முதலீடு செய்து 9.99 சதவீதம் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.
- மே 4 அன்று ரூபாய் 5,665.75 கோடி முதலீடு செய்ததன் மூலம் 1.15 சதவீதம் பங்குகளை சில்வர் லேக் நிறுவனம் வாங்கியுள்ளது.
- மே 8 அன்று ரூபாய் 11,367 கோடி முதலீடு செய்து 2.32 சதவீதம் பங்குகளை விஸ்டா நிறுவனம் வாங்கியது.
- மே 17 அன்று ரூபாய் 6,598.38 கோடி முதலீடு செய்து 1.34 சதவீதம் பங்குகளை ஜெனரல் அட்லன்டிக் வாங்கியுள்ளது.
- மே 22 அன்று ரூபாய் 11,367 கோடி முதலீடு செய்து 2.32 சதவிதம் பங்குகளை கேகேஆர் நிறுவனம் வாங்கியுள்ளது.
- ஜூன் 5 அன்று ரூபாய் 9,093.60 கோடி முதலீடு செய்து 1.85 சதவிதம் பங்குகளை முபாதலா நிறுவனம் வாங்கியுள்ளது.
- ஜூன் 5 அன்று மீண்டும் ரூபாய் 4,546 கோடி முதலீடு செய்து 0.93 சதவீதம் பங்குகளை சில்வர் லேக் நிறுவனம் வழங்கியுள்ளது.
- ஜூன் 8 அன்று ரூபாய் 5,863.50 கோடி முதலீடு செய்து அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ 1.16 சதவீதம் பங்குகளை வாங்கியுள்ளது.
- ஜூன் 13 அன்று ரூபாய் 4,546.80 கோடி முதலீடு செய்து டிபிஜி நிறுவனம் 0.9 3% பங்குகளை வாங்கியுள்ளது