மிதுன ராசி அன்பர்களே….! இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். ஆதாயம் வந்து சேரும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது. வாகனத்தை மாற்றலாம் என்ற சிந்தனை மேலோங்கும். அடுத்தவர்களை அனுசரித்து காரியங்களையும் நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு கொஞ்சம் ஏற்படும் சிந்தித்து செயல்படுவது நன்மையை கொடுக்கும்.
பணம் வரவு நல்லபடியாக வந்து சேரும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். பெரிய உதவிகள் கிடைக்கும். காரியத்தடைகள் கொஞ்சம் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு இன்று ஏற்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது ரொம்ப நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகளால் சில முக்கியமான பணியும் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இரக்கம் அதிகரிக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.