மும்பை அணி 15 ஓவர் முடிவில் 139/3 ரன்களுடன் தற்போது விளையாடி வருகிறது
ஐ.பி.எல்லில் இன்று 7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த நிலையில் சாஹல் பந்து வீச்சில் டிகாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சூர்யா குமார் யாதவ் , ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா 48 (33) ரன்களில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் யுவராஜ் சிங் களமிறங்கி, சூர்யா குமார் யாதவும் ஜோடி சேர்ந்தார். இதையடுத்து சஹால் வீசிய 14வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர் அடித்து மிரட்டி அடுத்த 4வது பந்தில் யுவராஜ் 23 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது பொல்லார்ட்3 *(3), சூரியகுமார் யாதவ் 36 *(22) ரன்களுடன் இருவரும் விளையாடி வருகின்றனர்.