Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை… கல்லூரி மாணவன் மீது பாய்ந்த போக்சோ!

பென்னாகரத்தில் 5 வயது குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட  கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தையிடம் கல்லூரி மாணவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குழந்தையின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த  பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் தனியார் கல்லூரி மாணவன் மாதேஸ்வரன் என்பவரிடம் பென்னாகரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்பு மாதேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உளவியல் ஆலோசனை:

சிறு வயதில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு, அந்த சம்பவம் எளிதில் ஆறாத வடுவாக மாறக்கூடும். அது வருங்காலத்தில் அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

ஆகவே, எதுவாக இருந்தாலும் மறைக்காமல் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தன்னம்பிக்கையை வளர்க்க முயற்சிக்க வேண்டும்.. இதற்கு குழந்தைகளுக்காக பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம் என்று உளவியல் துறை  நிபுணர்கள்  அறிவுரை வழங்கி வருகின்றனர்.

 

Categories

Tech |