சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை அயனாவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் 85 லட்சம் பேர் இருக்காங்க. தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்கான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.
நீங்கள் வேண்டுமானால் ஒரு செக்போஸ்டில் எல்லையில் பாருங்கள்… நம்ம காவல் துறையினர் வெயிலிலும், மழையிலும் இருக்கிறார்கள். எத்தனை லட்சம் பேர்கள் வெளியே செல்கிறார்கள் என்று பாருங்கள். ஆகவே இ-பாஸ்ஸில் எந்த குறையும் இல்லை. மக்களுடைய விழிப்புணர்வுல தான் குறைவு இருக்கிறது. அதை விழிப்போடு கையாள வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்.
நேத்துக்கூட பாத்தீங்கன்னா… மதுரை மேலூரில் ஒரு செக்போஸ்டில் காவல் துறை அலுவலர்கள் பணியில் இருக்கும் போது மீன் வண்டியை கொண்டு வந்து அதுல விட்டுட்டாங்க. அந்த அளவுக்கு உயிரை பணையம் வைத்து காவல் துறை அலுவலர்கள் எல்லையிலே பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நம்முடைய கடமை.
இ- பாஸ் வழங்குவதில் எந்த குறையும் இல்லை… எந்த குறையுமில்லை தேவையானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள், அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது. தேவையின்றி செல்பவருக்கு தான் தேவையான விவரங்களைத் தருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேற்று கூட முதலமைச்சர் அந்த காவலர்களை நேரில் சென்று ஆறுதல் சொல்ல சொன்னாங்க… மேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 காவலர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினோம். எல்லோரும் உயிரை பணையம் வைத்து பணி செய்கின்ற உலக பேரிடர். இதில் எல்லோரும் முன்வந்து பொறுப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இ.பாஸ் சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.