இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு தமிழக அமைச்சரவைக் கூட்டம் என்பது மதியம் 12 மணி அளவில் நடைபெற இருக்கிறது. மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்க கூடிய முடிவுகள், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்பாக தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் நாளுக்கு நாள் கொரோனா என்பது அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமாக தொற்று இருக்கின்றது.
இதையடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடுமையாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ நிபுணர் குழுவும் பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயங்கள் விவாதிக்கப் பட்டு அதன் அறிவிப்பினை தமிழக அரசு வெளியிடும் என்று சொல்லப்படுகின்றது.
குறிப்பாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல் பிற விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு பல்வேறு விதமான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கும் என்று எதிர்பார்ப்பது. குறிப்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஒரு முடிவினை தமிழக அமைச்சரவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
10 சதவீத உள் ஒதுக்கீடு என்பது அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு பரிந்துரையை அதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் கலையரசன் தலைமையில் ஆணையம் தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது. அதற்கான ஒரு சிறப்பு சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதலும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.