Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு வந்து… திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வெங்கமேடு ரயில்வே கேட் அருகே சின்ன குளத்துப்பாளை யம் பகுதியில் வசித்து வருபவர்கள் சிவமணி – வித்யா தம்பதியர்.. இவர்களது வீட்டின் அருகில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய முகமது ரியாஸ் கான் என்பவர் வசித்து வந்தார். இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது உறவினர் வீட்டிற்கு (கரூர்) வந்துள்ளார்.

இந்தநிலையில், அந்த சிறுவன் வித்யாவுக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளான்.. அந்தப் பெண் சிறுவனை பலமுறை கண்டித்தும், அவன் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வித்யா சிறுவன் மீது அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் சிறுவன் ரியாஸ் கானை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.. 17 வயது சிறுவன் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |