Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி….. 200ஐ தாண்டிய பாதிப்பு!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகமாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடைவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 194 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நேற்று நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 202ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |