இன்று காலை 11 மணிக்கு கொரோனா பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புஅதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசின் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்ப கால கட்டத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தான், கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், ஊரடங்கு அமல் படுத்த கோரி தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு அதற்கான எந்த திட்டமும் இல்லை என முதலமைச்சர் பழனிச்சாமி மறுத்துவிட்டார்.
கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், மருத்துவ நிபுணர் குழு இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சருடன் ஆலோசிக்கவுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? கொரோனா பாதிப்பை தடுக்க வேறு ஏதேனும் வழிமுறைகள் தீவிரப்படுத்தப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசிக்க உள்ளனர். எனவே காலை 11 மணிக்கு மேல் ஆலோசனை கூட்டம் முடிந்தபின் நல்ல முடிவுகள் எட்டப்படும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.