Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு அலட்சியமா இருக்கு… முதல்வர் பொறுப்பின்மையா இருக்காரு… முக.ஸ்டாலின் கடும் விமர்சனம் …!!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, தமிழகத்தில் கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூறவில்லை. நாட்டிலேயே கொரோனா பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போது தமிழகத்தில் மட்டும் அதிகரித்தது. அரசின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்து வருகின்றது.

இந்தியாவிலுள்ள நகரங்களிலேயே சென்னையில்தான் சராசரியாக தினமும் ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது. கொரோனவால் இரண்டு மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. முதற்கட்ட ஊரடங்கில் கொரோனா பாதிப்பு குறைந்த அளவில் இருந்தது. முதலமைச்சரின் பொறுப்பின்மையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.  கொரோனா பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை மறைப்பது ஆபத்தானவை. கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |