திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்கள் வாயிலாக தமிழக அரசிடம் 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை தனது இல்லத்தில் இருந்து இணையம் வாயிலாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பில் அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த ஸ்டாலின் அரசிடம் 5 கேள்விகளை முன் வைத்தார். அப்போது, இந்தக் கேள்விக்கான பதில் எனக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் எனவே இந்த கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு கேள்வியை முன்வைத்தார்.
- ) நோய் தடுப்பில் அரசு சிறப்பாக பணியாற்றுகிறது என்றும், சமூக பரவாயில்லை என்று சொல்வது உண்மை என்று சொன்னால் ஏன் கொரோனா நோய் தொற்று தினமும் ஏணிப்படிகள் போல அதிகரித்து கொண்டு இருக்கு.
- ) கொரோனவை கட்டுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பேட்டிகள் தான் இருக்கிறது. இதை நிறுத்திவிட்டு மேல்நோக்கி உயர்ந்து கொண்டு இருக்கும் கொரோனா வரைபடத்தை தட்டை ஆக்குவதற்கு, குறிப்பாக சென்னையில் அப்படி செய்வதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள் .
- ) ஊரடங்கு காலத்தில் கமிட்டி மேல் கமிட்டியை அமைத்தீர்கள். ஆனால் இதுவரை எந்த கமிட்டி அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வில்லை, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறோம் என்று மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்ற போறீங்க ?
- ) இந்த நெருக்கடியான நேரத்தில் ஆக்கபூர்வ மாக ஆதரவளிக்க உத்தரவாதம் அளிக்கும் எதிர்க்கட்சிகள், நிபுணர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேச அரசு தொடக்கத்திலிருந்து மறுத்து வருகிறது. அதற்கு என்ன காரணம் ?
- ) பேட்டிகள், பெயரளவு அறிவிப்புகளை நிறுத்திவிட்டு கொரோணா பேரிடர் காரணமாக நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை மாற்றியமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவது உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் எப்பொழுது இந்த அரசு ஆர்வம் காட்ட போகிறது ?
இந்த கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள். மக்கள் கேட்க விரும்பும் கேள்வியை தான் நான் இப்போ கேட்டுள்ளேன். இது அரசியல் கேள்விகள் அல்ல, அரசியலுக்கான கேள்விகளும் அல்ல, மக்களின் உயிர் சம்பந்தமான கேள்விகள். மக்களின் வாழ்க்கை தொடர்புடைய கேள்விகள், இதற்கு நேர்மையான பதிலை தமிழக அரசு தர வேண்டும், உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக தமிழக அரசை நான் கேட்டுக் கொள்கின்றேன் என முக.ஸ்டாலின் கேள்விகளை முன்வைத்தார்.