வந்தவாசி அருகே மின்வேலியில் உயிரிழந்த மாற்றுத்திறனாளியை பெண் காவல் அதிகாரி தூக்கி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று வந்தவாசி அருகே கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியல் சிக்கிய மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மின் வேலியில் சிக்கி உயிரிழந்த அந்த மாற்று திறனாளியை தூக்குமாறு அந்த பெண் காவல்துறை அதிகாரி பொது மக்களிடம் கேட்டபோது கொரோனா அச்சம் காரணமாக தூக்க மறுத்து விட்டார்கள்.
இருப்பினும் அந்த பெண் காவல் அதிகாரி உங்கள் வீட்டில் யாரேனும் இப்படி இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டும் அவர்கள் தூக்க முன் வராததால் ஒரே ஒருவரை மட்டும் கெஞ்சி அழைத்து அவரும் பெண் அதிகாரியும் இறந்த மாற்றுத்திறனாளியை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஊரே கொரோனா அச்சத்தால் மாற்றுத்திறனாளியை தொட மறுக்க பெண் காவல்துறை அதிகாரி மாற்றுத்திறனாளி உடலை தூக்கிச் சென்ற சம்பவம் காண்போரை நெகிழச் செய்துள்ளது.