Categories
மாநில செய்திகள்

வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸ் பதிவாக வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

மத்திய வங்கக்கடல், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசும், தென்மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும் என்பதால் வரும் 19ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |