Categories
தேசிய செய்திகள்

கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க டெல்லி காங்கிரஸ் கோரிக்கை!

கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவரின் ஆலோசனையின் படி நேற்று உள்துறை அமைச்சர் டெல்லி மாநில முதல்வர், சுகாதார அதிகாரிகள் மற்றும் டெல்லியில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து கட்சிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆம் ஆத்மி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கட்சியினர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |