Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சீனா மாதிரி வரும்…! ”முதல்வரிடம் சொல்லிட்டோம்” அரசு எடுக்கப்போகும் முடிவு …. பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசுக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ குழு பிரதிநிதி செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா பரிசோதனைகள் அதிகமாக செய்து, பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயாராக இருக்கின்றது. கொரோனா உச்சம் தொட்ட  குறைய ஆரம்பித்து மூன்று மாதத்திற்கு பின் மீண்டும் அதிகரிக்கும். சீனாவில் இரண்டாவது அலை ஆரம்பித்தது போல, தமிழகத்திலும் மூன்று மாதங்களுக்கு பின் ஆரம்பிக்கலாம் . அரசு நடவடிக்கை எடுத்தாலும் தனிமனித இடைவெளி போன்றவை மூலம் தான் கட்டுப்படுத்த முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனவை கட்டுபடுத்த பொதுமுடக்கத்தை  கடுமையாக முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளோம் என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான் தமிழக அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் மருத்துவக்குழு முடிவுகளை குறித்து அமைச்சரவை ஆலோசிக்கும் பின்னர் சென்னையில் மேலும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |