Categories
மாநில செய்திகள்

ஊழல் புகார் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு வயதை உயர்த்தியதற்கு எதிர்ப்பு… அரசு பதில் தர உத்தரவு..!!

ஊழல் குற்றசாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெரும் வயது உயர்த்தப்பட்டதை எதிரித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்:

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருப்புசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியது. நேர்மையாக, நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை ஓராண்டு நீடிப்பதால் எந்த தவறும் இல்லை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வேளையில் ஊழலை குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு பெரும் வயதினை உயர்த்தியதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியலைப்பு சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும், எனவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளவர்களின் ஓய்வு பெரும் வயதை நீட்டித்து பிறப்பித்த அரசின் உத்தரவு செல்லாது என அறிவிக்கப்ப வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு உத்தரவு:

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Categories

Tech |