சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதிகாலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் 19ம் தேதி முதல் அதிகாலை 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர், பின்னர் அமைச்சரவை கூட்டத்தை தொடங்கினார்.
அதில், கொரோனா பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்கவும், மேலும் தளர்வுகளை குறைக்கவும் தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
21 மற்றும் 28ம் தேதிகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதி காலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மத்திய 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.