Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்கிய தகவல் மறைப்பு…. சும்மா இருக்க முடியாது… அதான் உங்களிடம் பேசுறேன் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று  இணையம் மூலமாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் ஒவ்வொருவரையும் சந்திக்க முடியாத சூழலில் இருந்து கொண்டிருக்கிறோம். இன்றைய சூழலிலும் உயிரை பணயம் வைத்து செய்திகளை சேகரித்து வரக்கூடிய ஊடக நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல ? ஊடக நண்பர்களாக இருக்கக்கூடிய பலர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துகிட்டு இருக்காங்க. அவருடைய உடல்நலம் குறித்து அவ்வப்போது விசாரிகின்றேன். கடமை உங்களை பரபரப்பாக இயக்கினாலும், உங்களை நீங்கள் தற்காத்துக் கொண்டு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென உங்களுடைய சகோதரனாக இருந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் மோசமான பாதிப்பு:

கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் உயிழந்துள்ளனர். அன்மையில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் –  திருவல்லிக்கேணி சட்டமன்ற சகோதர் திரு. அன்பழகன் அவர்களையும் இந்த கொரோனா நோய் பலி வாங்கியது. இந்த பேரிடர் சூழலில் தமிழகத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சில கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக அரசுக்கும், மக்களுக்கும் தெரிவிப்பது என்னுடைய முக்கியமான கடமையாக நான் கருதுகிறேன்.  கடந்த இரண்டரை மாதமாக கொரோனா நோய் தொற்றால் தமிழகம் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

முக்கிய தகவல் மறைப்பு:

நாட்டின் பிற மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு நிலைமை சீராகி வருகிறது. தமிழகத்தில் தினமும் அதிகரித்து வரும் நோய் தொற்று  எண்ணிக்கை பார்த்து நம் இயல்பு வாழ்வைப் பற்றி எப்படி யோசிக்க முடியும். இறப்பு எண்ணிக்கையும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இந்திய நாடே தமிழ் நாட்டினை பற்றி பேசும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஆனால் இந்த சூழலை சமாளிக்க சரியான முடிவு எடுக்காமல் நமது தமிழக அரசு திணறிக் கொண்டிருக்கிறது. கொரோனா நெருக்கடிலிருந்து இருந்து தங்களை மீட்க வேண்டுமென்று தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் நோயை குறித்த முக்கிய தகவலை மறைக்கின்ற அரசின் போக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.

DMK President MK Stalin questions AIADMK over handling of COVID-19 in Tamil Nadu, says offering hardly any solutions, strategies | India News | Zee News

சாதாரணமா இருக்க முடியாது:

இந்த ஆபத்தை உணர்த்துவதற்காக தான் இன்று உங்களை எல்லாம் இந்த காணொலிக் காட்சி மூலமாக பேசுவதற்கு நான் விரும்புகிறேன். நோயால் இறந்தவர் கணக்கை மறைப்பதையும், வெளிப்படைத் தன்மையில்லாததையும் தவறு என்று சொல்லி சாதாரணமாக இருந்து விட முடியாது. அரசின் பொறுப்பற்ற தன்மையினால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. தற்போதைய நிலவரத்தை சில புள்ளி விவரங்கள் மூலமாக உங்களுக்கு நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பல புள்ளி விவரங்களை அடுக்கினார்.

Categories

Tech |