Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(16.06.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

16-06-2020, ஆனி 02, செவ்வாய்க்கிழமை.

இராகு காலம் மதியம் 03.00-04.30

எம கண்டம் காலை 09.00-10.30

குளிகன் மதியம் 12.00-1.30.

நாளைய ராசிப்பலன் –  16.06.2020

மேஷம்

இன்று எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சனை ஓரளவு நீங்கும்.

ரிஷபம்

குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சுப காரியங்கள் கை கூடும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை கொடுக்கும். தொழில் தொடர்புகள் மூலம் நன்மை உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

மிதுனம்

நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் கைகூடும்.

கடகம்

குடும்பத்தில் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பாக பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

சிம்மம்

ஆரோக்கியம் இன்று பலவீனமாக காணப்படும். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழிலில் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வேலையில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை நம்பி வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிரச்சினைகள் உருவாகும்.

துலாம்

நண்பர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டு. தொழில் தொடர்பான வழக்கு விசயங்களில் சாதகமான பலனைக் கொடுக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் மூலம் வந்த பிரச்சனைகள் தீரும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.

தனுசு

உங்களுக்கு பணவரவுகள் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை காணப்படும். வியாபார வளர்ச்சி காண முயற்சிகள் குடும்பத்தாரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

மகரம்

இன்று நீங்கள் மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எதிலும் கவனம் வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தெய்வ வழிபாடுமன அமைதியைக் கொடுக்கும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும்.

கும்பம்

மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மீனம்

குடும்பத்தில் உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணப்புழக்கம் குறைவாக இருக்கும். வியாபாரத்தில் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் மறையும்.

Categories

Tech |