Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் சிறுவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை… தமிழக அரசு பதில்..!!

சென்னை ராயபுரம் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதில், நோயின் தாக்கத்தை வைத்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு பல மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்துள்ளதால் கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா அறிக்கை தாக்கல் செய்தார். குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்:

ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மொத்தம் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் கடந்த 6ம் தேதி வரை 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து மீதமுள்ள சிறுவர்கள் அருகில் உள்ள சமூக நலக்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்துதலில் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த செய்தியை அறிந்த உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது, ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் பல்வேறு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் எப்படி இந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காப்பாளருக்கு ஏற்பட்ட தொற்றால், குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அரசு காப்பகங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |