Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செம முடிவு எடுத்த தமிழக அரசு…. இனி அவசர சட்டம் தயார்…. மாஸ் காட்டும் அரசு பள்ளி …!!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நீட்  தேர்வு மூலமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வு சேர்க்கையில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க படும் என்ற அறிவிப்பை தமிழக முதலமைச்சர் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் அறிவித்தார். இதில்  ஏற்படக்கூடிய பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் அறிக்கை என்பது கடந்த எட்டாம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு மாணவர் சேர்க்கையில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக  அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது. இது அரசு பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |