Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று புதிதாக 82 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,348 பேர்.. பினராயி விஜயன்!!

கேரளாவில் மாநிலத்தில் இன்று மேலும் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,542 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,348 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், இன்று மட்டும் 73 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். அதில், யுஏஇ -19, குவைத் -12, சவுதி அரேபியா -9, கத்தார் -5, ஓமான் -2 மற்றும் நைஜீரியா -2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பிற மாநிலங்களிலிருந்து வந்த 23 பேர் இன்று கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், மகாராஷ்டிரா -13, தமிழ்நாடு -4, டெல்லி -3, ராஜஸ்தான் -1, மேற்கு வங்கம் -1 மற்றும் தெலுங்கானா ஒருவர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,460 ஆக இருந்தது. நேற்று மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக இருந்தது. மேலும் இதுவரை 20 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |