Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இந்திய ஊழியர்கள் இருக்கும் இடம் எங்கே ? பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய அதிகாரிகள் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது.

இன்று காலை பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கிவரும் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதை அடுத்து இந்திய அதிகாரிகள் இரண்டு பேரும் எங்கிருக்கிறார்கள் ? இந்திய அதிகாரிகளுக்கு என்ன ஆனது ? என்று அடுக்கடுக்கான விவரங்கள், விசாரணைகள் இந்திய அரசால் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது, பாகிஸ்தான் காணாமல் போன 2 இந்திய தூதரக ஊழியர் இருக்குமிடம் கண்டறியப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழியர்கள் சென்ற வாகனம் ஒருவர் மீது மோதியதால் இரண்டு பேரையும் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சொல்லப்படுகின்றது.  2 ஊழியர்களையும்,  அவரது வாகனத்தையும் உடனே இந்திய தூதரகத்திடம்  ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கையால் பேசுவரத்தை இல்லாமல்  இருந்த நிலையில் தற்போது காலை முதல் நிகழ்ந்த பரபரப்பு சற்று தணிந்துள்ளது.

Categories

Tech |