நீட் தேர்வு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் கல்வியாளர் தரப்பிலிருந்து முன்வைக்கக்கூடிய கருத்தாக இருக்கின்றது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 2600 மாநில ஒதுக்கீட்டு இடங்களாக இருக்கின்றது. இந்த இடங்களில் சென்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை என்று கடந்த ஆண்டை ஒப்பீட்டு பார்த்தால் வெறும் ஒரு மாணவர் மட்டும் சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றது.
இந்த நிலையில் தான் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு மூலம் மருத்து சேர்க்கைக்கு செல்லும் மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான முடிவு எடுப்பதற்கு முன்னாள் நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு உள் ஒதுக்கீட்டை வழங்கலாமா ? என்பது குறித்து பரிசீலித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் கடந்த 8ம் தேதி அந்த அறிக்கையை நீதியரசர் கலையரசன் குழு தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.அதில் அரசு பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற ஒரு பரிந்துரை கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இதனைடிப்படையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை இதற்கான சிறப்பு சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததுள்ளது. இதன் மூலமாக அரசுப் பள்ளி மாணவர் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு மூலமாக செல்லமுடியும். எவ்வளவு மாணவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கின்றனர் ? அவர்களுடைய வாழ்க்கைத் தரம் எந்த அளவில் இருக்கின்றது ? நீட் தேர்வு பயிற்சி செல்ல முடியாத சூழலில் உள்ள மாணவர்கள் எவ்வளவு பேர் உள்ளிட்ட அனைத்து அமைச்சங்களையும் குழு ஆராய்ந்து இந்த பரிந்துரை வழங்கப்பட்டது. தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் பெற்றோர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.