Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்குனு தெரியல? அப்படி சொல்லிட்டு, இப்படி செய்யுறீங்க – முக.ஸ்டாலின் குற்றசாட்டு ..!!

இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

12 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் வருகின்ற 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன @CMOTamilNadu 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அறிவிக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை! இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அதிமுக அரசு முதலில் வெளிவந்து விரிவான பரிசோதனைகள், தொற்றுக்கான தொடர்புகள், உரிய சிகிச்சைகளே -ஐ தடுக்கும் வழி என்பதை உணர வேண்டும். கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்!

Categories

Tech |