Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி, நாமக்கல், ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என்றும் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

சென்னை – 1,257, செங்கல்பட்டு – 120, திருவள்ளூர் – 50, காஞ்சிபுரம் – 40, தேனி – 11, தென்காசி – 8, திருவாரூர் – 10, கன்னியாகுமரி – 5, திருப்பூர் – 2, நாகப்பட்டினம் – 10, கரூர் – 1, சிவகங்கை – 9, புதுக்கோட்டை -11, திருப்பத்தூர் – 1, கிருஷ்ணகிரி – 2, நீலகிரி – 3, மதுரை – 33, தூத்துக்குடி – 38, திருவண்ணாமலை – 33, ராணிப்பேட்டை – 37, வேலூர் – 21, நெல்லை – 25, கடலூர் – 27, தஞ்சை -12, விழுப்புரம் – 13, அரியலூர் – 1, கள்ளக்குறிச்சி – 12, சேலம் – 3, திண்டுக்கல் – 2, கோவை – 3, விருதுநகர் – 9, திருச்சி – 8 என மொத்தம் 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |