Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பாத்து சிரிச்சாங்க…”என்ன செய்யனு தெரில” அங்கும் இங்கும் ஓடிச்சு …!!

நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின்  காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக மீதான விமர்சங்களை தேதி வாரியாக பட்டியலிட்டார். அப்போது  நாடு முழுவதும் உள்ள மொத்த கொரோனா எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 10 சதவீதம் மட்டுமின்றி தற்போது,  நோய் தொற்று 5.2 சதவீதம் என்ற வீதத்தில் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 435 பேர் கொரோனா நோய் தொற்றினால் இறந்து இருப்பதாகவும்,  அது 0.7 சதவீதம் மரண வீகிதம் என்று அரசு வெளியிட்டுள்ள தகவல் தெரிகின்றது.

பகிரங்க குற்றசாட்டு:

இந்த அரசாங்கம் எந்தளவுக்கு இரக்கமற்றதாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனை பார்த்து மாநில அரசாங்கத்துக்கு பதற்றமோ, படபடப்போ வந்ததாக தெரியவில்லை. படிப்படியாக ஒவ்வொரு நாளும் இந்த அரசாங்கம் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு வந்துள்ளது என்று நான் பகிரங்கமாக இந்த நேரத்தில் குற்றம்சாட்டுகின்றேன். மார்ச் 7 தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  முதல் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், தொடக்கத்திலிருந்தே வாய்ப்புகள் இருந்தபோதும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

எள்ளி நகையாடினார்கள்:

நோய் தொற்று பரவுயும் அரசு செயல்படாத அலட்சியத்தால் இன்றைக்கு நம்மை நோய் பேரிடருக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. மார்ச் 17 சட்டமன்றத்தை ஒத்தி வைத்து கொரோனா தடுப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என்பது, போன்ற பல பிரச்சினைகள் எல்லாம் கோரிக்கைகள் தான் திமுக சட்டமன்றத்தில் எழுப்பியது. உடனே இது மருத்துவ விவகாரம் என்று சொன்னார்கள், வேற எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று  கூறி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எங்களை எல்லாம் பார்த்து எள்ளி நகையாடினார்.

அங்கும் இங்கும் ஓடுது :

முதலமைச்சரின் பொறுப்பின்மையால் இன்றைக்கு தமிழ் நாடு இந்திய நாட்டுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2 ஆவது மாநிலமாக மாறிடுச்சு. மார்ச் 21 மத்திய அரசு ஊரடங்கு அறிவித்த பிறகுதான், அதிமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தொடங்கியது. அது வரை மத்திய அரசின் பொம்மை ஆக இருந்து குழப்பத்தில் என்ன செய்றதுன்னு தெரியாம அதிமுக அரசு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது . மார்ச் 28 ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கு 5000 ரூபாய் பணம் உதவி செய்யணும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்திகிட்டு இருக்கு, இப்பவும் சொல்லிகிட்டு இருக்கு.

மொத்த பட்ஜெட்டில் 2% கூட இல்லை:

2 லட்சம் கோடி ரூபாய் நிதி நிலை அறிக்கை வெளியிட்ட இந்த மாநில அரசுக்கு மக்களுடைய பட்டினியை போக்க இந்த நிதியுதவிக்கு 3850 கோடி ரூபாய்தான் தேவைப்பட்டிருக்கும். ஒட்டு  மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம் கூட இல்லாத இந்த பண உதவியை அதிமுக அரசு மக்களுக்கு அளிக்க முன்வராததற்கு என்ன காரணம் ? மார்ச் 28 இந்த தருணத்தில் அரசியல் மன மாச்சரியங்கள் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து கொரோனா பேரிடரில் மக்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்று நான் பலமுறை எடுத்துச் சொல்லி , அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கையும் தொடர்ந்து சொல்லிட்டு இருக்கேன் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். 

Categories

Tech |