பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவரிடமும் பேச முடிந்தது. நம் மாநில முதலமைச்சர் இடத்தில் பேச முடியவில்லை என ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிமுக அரசு தவறவிட்ட பல விஷயங்களை புள்ளி விவரங்களோடு திமுக தலைவர் முக.ஸ்டலின் தெரிவித்தார். காணொளி மூலம் நடைபெற்ற 30 நிமிட செய்தியார்கள் சந்திப்பில் முக.ஸ்டாலின் பல்வேறு குற்றசாட்டுகளை அரசின் மீது வைத்தார். அதில், முதலமைச்சரின் பொறுப்பின்மையால் இன்றைக்கு தமிழ் நாடு இந்திய நாட்டுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2 ஆவது மாநிலமாக மாறிடுச்சு. மார்ச் 21 மத்திய அரசு ஊரடங்கு அறிவித்த பிறகுதான், அதிமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
முதல்வரிடம் பேச முடியல:
இந்த கொரோனா நோய் காலத்தில் பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவரிடமும் பேச முடிந்தது. ஆனால் நம்முடைய மாநில முதலமைச்சர் இடத்தில் பேச முடியவில்லை என்பது வேடிக்கையாகவும், வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கு. ஏப்ரல் 14 முதல் கட்ட ஒரு ஊரடங்கை வீண் அடிச்சோம். தேசிய அளவில் 10 லட்சம் பேருக்கு 539 என்ற பரிசோதனை செய்யப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு 32 பேர் மட்டுமே பரிசோதனை செய்தோம். ஆகவே முதல் ஊரடங்கு முடியும் போதே நோய்தொற்ற்றில் நாட்டில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலமாக மாறியது.
தவறாக வழி நடத்துகின்றார்:
இப்பொழுது நான்காம் கட்ட ஊரடங்கு பிறகும் இந்தியாவில் மொத்த நோய் தொற்றில் 10% சென்னை கொண்டுள்ளது. நோய் தொற்று அதிகரிப்பு கிராப் சமநிலைக்கு வரும் வாய்ப்பு இருந்தும் கூட அருகாமையில் தென்படவில்லை. ஏப்ரல் 16 தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் கூடுதலான நோய்த்தொற்று இருந்த காரணத்தில் நோயின் தீவிரத்தை மக்களுக்கு தெரிய படுத்துவதற்கு பதிலாக முதலமைச்சர் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் கொரோனா போய்விடும் என்று அறிவித்து மக்களை தவறாக வழி நடத்தினார்.
ஜோக்காக இருக்கு:
கொரோனா பணக்காரர்களின் வியாதி என்றும், வெளிநாட்டிற்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று திரும்புபவர்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறி இந்த நோயை பற்றிய எந்த புரிதலும் இல்லாதவராக இருந்தார். இன்று அரசின் தகவலின்படி 95 சதவிகித கொரோனா நோய்த்தொற்று தமிழகத்துக்கு உள்ளே உருவானது. வெளிநாட்டிலிருந்தோ, வெளிமாநிலத்தில் இருந்தோ இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை பார்க்கும் போது முதல் அமைச்சர் கூறியது ஜோக்காக இருக்கின்றது என்று முக.ஸ்டாலின் விமர்சித்தார்.