கொரோனா நோய் தொற்று குறித்த விவரங்களில் தமிழக அரசு வரிசையாக தவறுக்கு மேல் தவறு செய்தது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், மே 13ஆம் தேதி நோய்தொற்று மிக அதிகமாக இருந்த நேரத்தில் ஜூன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவோம் என்று அறிவித்தது. அதற்குள் நோய் தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்ற பொய் தோற்றத்தினை மக்களிடையே அரசு ஏற்படுத்திச்சு. 31ம் தேதி வரை மத்திய அரசு ஓர் இடங்கை நீடித்த பிறகுதான் தேர்வை நடத்த முடியாது என்பதை தமிழக அரசு உணர்ந்தது. இப்படியான குழப்பமான அறிவிப்புகளை அரசு எந்த அடிப்படையில் அறிவித்தது. ஜூன் 7 தொடர்ந்து மோசமாக இருக்கும்போது நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15ம் தேதி நடத்துவோம் என்று அரசு அறிவித்தது.
வெளிப்படைத்தன்மை இல்லை:
எதிர்க்கட்சியின் அழுத்தத்தாலும் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களின் எதிர்பாலும், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் தேர்வை ரத்து செய்தனர். 9 லட்சம் மாணவர்களின் உயிரை பணையம் வைத்து இப்படி ஒரு தேர்வு நடத்தும் முடிவை அரசு எப்படி நியாயப்படுத்தும். இப்படி வரிசையாக தவறுக்கு மேல் தவறு செய்தது தமிழக அரசு. நோய்தொற்று குறித்த தகவல்களின் வெளிப்படைத்தன்மை ஆரம்பத்திலிருந்தே இந்த அரசிடம் இல்லை. ஜூன் 7 கொரோனா நோய் துவக்கத்தில் இருந்து பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு தகவலின் வெளிப்படைத்தன்மை இல்லை.
ஒருநாள் மட்டும் வெளியீடு :
திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி அதன் பிறகு ஜூன் 7ஆம் தேதிக்கு பிறகு மாவட்ட வாரியாக பரிசோதனை குறித்து ஒரு நாள் மட்டும் அறிவிப்பு வெளியிட்டனர். பின்பு அதையும் நிறுத்தி விட்டனர். ஜூன்8-இல் இந்தியன் ஜெனரல் ஆப் மெடிக்கல் ரிசர்ச்சில் வெளிவந்துள்ள ஆய்வின்படி தமிழ்நாட்டில் 577 பேர் உட்பட நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் இருக்கும் 52 மாவட்டங்களில் 5,911 பேர் மிகக்கடுமையான சுவாச தொற்றுடன் கூடியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 102 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர் பணயம்:
அவ்வாறு உறுதிசெய்யப்பட்டவர்களில் 40-பேர் அதாவது 39.2 சதவீதம் நபர்களுக்கு யார் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவலோ, அவர் வெளிநாடு சென்று வந்ததாகவோ தகவல் தெரியவில்லை. சமூக பரவல் இல்லை என்று கூறி மக்களின் உயிரைப் பணயம் வைத்து, தவறான தகவல் மூலம் வைத்து இந்த அரசு, அரசியல் லாபம் தேட முயற்சி செய்து கொண்டு இருக்கின்றது. ஜூன் 13 மே மாதம் 28ம் தேதி நிகழ்ந்த மரணம் மூன்று வாரம் கழித்து ஜூன் 7ஆம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்தார்.