சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு அதன் கேப்டனாக உள்ள மகேந்திர சிங் தோணியே காரணம் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ கூறியுள்ளார்.
சமூகவலைத்தளம் ஒன்றின் நேரலையில் பேட்டியளித்த அவர் தனது அனுபவங்கள் என பல விஷயங்கள் குறித்து பேசினார். தோனி குறித்து கூறுகையில், எந்த சூழ்நிலையிலும் சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் திறன் அவரிடம் காணப்படுவதாகவும் டுவைன் பிராவோ குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஒப்பந்தப் பட்டியல் அதாவது , அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு வரையிலான பட்டியல் வெளியானது . 4 பிரிவுகளாக கிரிக்கெட் வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.