சென்னையில் இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் அரசு கொரோனோவால் பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியாகியுள்ளனர். சூளைமேட்டை சேர்ந்த 72 வயது மற்றும் 62 வயது முதியவர் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரம்விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் சென்னையில் மட்டும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 404ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.