Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பாதிப்பு…. குறையும் இறப்பு விகிதம்… அமெரிக்காவில் தணியும் கொரோனா பயம் …!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றினால் 81 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41  லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் பிரேசிலில் 23,674 பேருக்கு அமெரிக்காவில் 20,680 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரவிவரும் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அதில் 1,16,114 பேர் மரணமடைந்துள்ளனர். அந்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது. ஓக்லஹோமாவில் நிலைமை இதுதான். ஜனாதிபதியான ட்ரம்ப் சனிக்கிழமை அன்று பிரச்சார பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். கொரோனா தாக்கத்தை அதிகரிக்க வேண்டாமென துல்சா நகரம் வேண்டுகோள் வைக்க அதனை நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் மரணமடைத்தவர்களின் எண்ணிக்கை 400 க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது திங்கள்கிழமை அன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 382 ஆக  பதிவானது. செவ்வாய்கிழமையான இன்று 385 ஆக பதிவாகியுள்ளது.

Categories

Tech |