சென்னையில் நேற்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 382 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.02% ஆண்கள், 39.97% பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 17,275 பேர் குணமடைந்துள்ள நிலையில் 14,778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 5,364,
கோடம்பாக்கம் – 3,539,
திரு.வி.க நகரில் – 2,922,
அண்ணா நகர் – 3,330,
தேனாம்பேட்டை – 4,031,
தண்டையார் பேட்டை – 4,226,
வளசரவாக்கம் – 1,413,
அடையாறு – 1,885,
திருவொற்றியூர் – 1,224,
மாதவரம் – 894,
பெருங்குடி – 630,
சோளிங்கநல்லூர் – 615,
ஆலந்தூர் – 670,
அம்பத்தூர் – 1,148,
மணலி – 470 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 687 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.