Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 447ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் நேற்று வரை 440 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 364 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 71 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 447ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |