Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை கொன்று விடுவேன்… இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!

இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டிய சக அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து, மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.. 

கோவை துடியலூரை அடுத்துள்ள  தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்.. ஆட்டோ டிரைவரான இவர் ஆரம்பக் காலத்தில் இந்து முன்னணி அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.. அதன்பின்னர் அக்கட்சியிலிருந்து விலகிய மதன் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் இணைந்தார்.

இந்தநிலையில் தான் இந்து முன்னணியில் உறுப்பினராக இருக்கும் சக்தி என்பவர் அடிக்கடி மதனுக்கும், அவரது நண்பர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இதற்கிடையே கடந்த 7-ஆம் தேதி, ஜோதி புரம் பகுதியில் வைத்து சக்தி மற்றும் அவரது நண்பர்கள் கையில் கத்தியுடன் மதன் மற்றும் அவரது நண்பர்களை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.. அதன் பின்னர் மீண்டும் தென்னம்பாளையம் பகுதியிலும் மதனை மிரட்டியதாக தெரிகிறது.

அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், இது குறித்து மதன் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். மேலும் சக்தி கத்தியுடன் மிரட்டும் வீடியோவையும் வெளியிட்டார்.. இந்தப் புகாரின் அடிப்படையில், சக்தி உட்பட 4 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து சக்தியை கைதுசெய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர். மேலும் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் மற்ற 3 பேரை தீவிரமாக வலைவீசி தேடிவருகின்றனர்.

Categories

Tech |