சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதால் பீஜிங்கில் பரிசோதனையை மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளனர்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா தொற்றை பல தடுப்பு நடவடிக்கைகளால் விரைவில் சீனா கட்டுக்குள் கொண்டுவந்தது. ஏப்ரல் மாதம் இறுதியல் தொற்றின் தாக்கம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அந்நாட்டில் இருந்தவர்கள் கருதி இருந்த நிலையில் அவர்களுக்கு பேரிடியாக தற்போது மீண்டும் அங்கு கொரோனா நோயாளிகள் உருவாக தொடங்கியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கும் மேல் தொற்று ஏற்படாத சீனாவில் கடந்த சில தினங்களாக 67 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 42 பேர் தலைநகரான பீஜிங்கில் சேர்ந்தவர்கள். தற்போது வரை பீஜிங் நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600க்கும்மேல் சென்றுள்ளது. தலைநகரான பீஜிங் நகரில் புகழ்பெற்ற ஜிம்பாடி சந்தை மூலமாக தொற்று பரவி இருப்பது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்பட்ட பின்னர் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஜிம்பாடி தந்தை உட்பட ஏழு சந்தைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதோடு சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தும் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டுள்ளன. 30 ஆம் தேதிக்கு பிறகு சந்தைக்கு சென்று வந்தவர்கள் யார் என கண்டறிந்து கொரோனா தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இதுவரை 29,386 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 12,973 பேருக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்களுக்கான முடிவுகள் விரைவில் வெளிவரும் என சுகாதாரக்குழு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் குளிர்காலத்தில் தாக்கும் என நினைத்திருந்த கொரோனா தொற்று தற்போதே தாக்க ஆரம்பித்து இருப்பதால் அந்நாட்டு அரசு அதிர்ந்து போய் உள்ளது. எனினும் சுதாரித்துக் கொண்டவர்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி பீஜிங்கில் இருக்கும் அனைத்து மருத்துவமனையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளனர். அவ்வகையில் சீனாவில் நேற்றைய நிலவரப்படி 83,181 தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 78,370 பேர் குணமடைந்து 4,634 பேர் உயிரிழந்துள்ளனர்.