Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர், அமைச்சர் மீது வழக்குப்பதிய திமுக ஆர்.எஸ்.பாரதி மனு… லஞ்சஒழிப்புத்துறை பதில்தர உத்தரவு!!

பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று ஆர்.எஸ்.பாரதி சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது லஞ்சஒழிப்பு துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மனு விவரம்:

மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,950 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 12,524 கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் கேபிள் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்துகொண்ட பெரும்பாலான நிறுவனங்கள் கலந்துகொண்டன.

ஆனால் குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டிள்ளது. இது தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பங்கு உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா அச்சம் பரவ தொடங்கிய டிசம்பர் மாதத்தில் அதிக கவனம் செலுத்தாமல் குறிபிட்ட 2 நிறுவனங்களை தேர்வு செய்ய உள்நோக்கத்துடன் விதிகளை மாற்றி அமைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல், முதல்வர் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் விருப்பத்திற்கிணங்க டெண்டர் ஒதுக்கும்படி தொழில்நுட்பத்துறை செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு மற்றும் தனியார் நிறுவன இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பதில் தர ஐகோர்ட் உத்தரவு:

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்வது குறித்து லஞ்சஒழிப்பு துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |