Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல்…. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..!!

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா இந்தியா ராணுவத்தினர் இடையே மோதல் மூண்டது. மேலும் சீனா அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது.

இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளும் தங்களது படைகளை திரும்பப்பெற்றனர்.

இதையடுத்து எல்லைப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ராஜ்நாத் சிங் முப்படை தளபதியுடன் ஆலோசனையும் நடத்தினார். இந்த நிலையில் நேற்று இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக தீவிரமடைந்து வந்த இந்த பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய முடிவெடுத்ததன் காரணமாக, எல்லையில் அமைதி நிலவுவதாக இரு நாடுகளும் கூறி வந்தன. இந்த நிலையில் சீனா திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 வீர்ரகள் மரணமடைந்துள்ளனர்.

Categories

Tech |