Categories
உலக செய்திகள்

அண்ணனை போல ஆக்ரோஷம்… சொல்லி அடித்த கிம் ஜாங் தங்கை… தகவல் தொடர்பு அலுவலகம் தகர்ப்பு …!!

வடகொரியா – தென்கொரியா நாடுகளுக்கு இடையே இருந்த தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் சில நாட்களுக்கு முன்பாக வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி சிலர் பலூன்கள் விட்டு வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார்கள். அந்த பலூன்கள் வடகொரிய எல்லை தாண்டி வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் வட கொரியாவின் ஆட்சியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், அதிபர் கிம் ஜாங் உன்னும் வடகொரியாவின் அரசும் எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதனை பயன்படுத்தி தென் கொரியா மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க ராணுவ தளபதிக்கு உத்தரவிட்டுள்ளேன். நாட்டு மக்களின் கோபத்தை குறைக்க ராணுவம் கண்டிப்பாக நடவடிக்கைகளை நிறைவேற்றும். விரைவில் கெய்சோங்கில் இருக்கும் தொடர்பு அலுவலகம் அழிக்கப்படுவதை தென் கொரியா காணும்  எனவும் எச்சரித்திருந்தார்.

இந்த பகிரங்க எச்சரிக்கை வடகொரிய – தென்கொரிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில்  இரு நாடுகளுக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா தகர்த்துள்ளது. இந்த அலுவலகம் வடகொரியா நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |