இந்தியாவிற்கு மாற்றாக சீனா என்றும் அமையாது நேபாள இந்தியா உறவுகள் மோசமடைந்து விடக்கூடாது என மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்
இந்தியா-நேபாள உறவுகள் மோசமாக கூடாது. இந்தியாவிற்கு மாற்றாக சீனா இருக்காது என நேபாள மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நேபாள நாடு அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதால் இந்தியா-நேபாள உறவு மோசமடைய கூடாது. இந்தியாவிற்கு சீனா மாற்று எனக் கருதுவது விவேகமற்றது. இந்தியாவின் எல்லைகளினால் சூழப்பட்டு நேபாளம் பூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க நினைத்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நேபாளம்-இந்தியா உறவுகள் சேதமடைய எப்பொழுதும் அனுமதிக்கக்கூடாது. பிரச்சினையை விரைந்து தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை அவசியம். நேபாளம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்தியாவை சார்ந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும். ஆனால் 14 சதவீதம் மட்டுமே சீனாவிலிருந்து பெறப்படுகின்றது. அத்தியாவசியப் பொருட்களை பொருத்தமட்டில் இந்தியாவிற்கு சீனா மாற்றாக அமையாது.
கிழக்கில் மெச்சியிலிருந்து மேற்கில் மகாகாலி வரை இந்தியாவுடன் வர்த்தக புள்ளிகளை கொண்டுள்ளோம். அண்டை நாடுகளான சீனா உள்ளிட்டவற்றுடன் போக்குவரத்து புள்ளிகள் மட்டுமே இருக்கின்றது. அவற்றிற்கும் உள்கட்டமைப்பு இல்லை எங்கள் ஏற்றுமதியை பொருத்தவரை 60 சதவீதத்தை இந்தியாவை பெறுகின்றது சீனாவிற்கு 2% மட்டுமே செல்கின்றது. பணம் அனுப்புவதில் இந்தியாவிடமிருந்து மொத்தமாக 15 சதவீதத்தை நாங்கள் பெறுகின்றோம் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்பொழுது 4.5 சதவீதமாக வருகிறது” என கூறியுள்ளார்