Categories
மாநில செய்திகள்

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த கோவை நபர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்!

கோவையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்த நபர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.

கோவையில் ஏற்கனவே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 479 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் நீரழிவு போற்ற வேறு ஒரு நோய்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களே அதிகம் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கோவையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் கொரோனோவில் இருந்து குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை 180 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 149 பேர் குணடமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவையில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ளார்.

Categories

Tech |