டெல்லி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தடுப்பதற்காக மத்திய அரசு சார்பிலும், சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு எப்படி அதிகரித்து வருகிறதோ? அதே போல் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் அங்கே கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் பணியாற்றி வந்த, சுகாதாரத்துறை அமைச்சரான சத்யேந்திர ஜெயின் என்பவர் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.