அடையாள அட்டை உள்ள 13,35,000 நபர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயங்களில் பொது மக்களில் பெரும்பாலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டதையடுத்து பலர் தங்களது வேலைக்குச் சென்றுவிடுகின்றனர்.
மீண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை கடுமையாக்கப் பட உள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பாதித்து விடக்கூடாது என்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து, அதேபோல் அறிவிப்பு ஒன்றை மீண்டும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகம் முழுவதும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1000 நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.