இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகின்றார்.
இந்தியா – சீனா வீரர்களிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 3 பேரும், சீனா தரப்பில் 5 வீரர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைக்கும் இடையே பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லடாக் எல்லையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை குறித்து விரிவாக விவரித்திருக்கிறார்.
ராஜ்நாத் சிங் இதற்கு முன்னதாக ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்தியா – சீனா எல்லையில் எப்படி மோதல் நடந்தது ? எப்படியான விஷயங்களை மேற்கொள்ளலாம் ? இராணுவ ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ? தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ? போன்ற பல்வேறு விஷயங்களை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.