தேசிய அளவிலான இறப்பு விகிதத்தில் இரண்டாமிடம் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் பாதிப்பு பெரும்பாலும் அதிகரித்து வருகிறது. இதுவரை மகாராஷ்டிராவில் 4128 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 1505 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிபிசி செய்தி நிறுவனமானது “மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் தான் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது எனவும், தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிக உயிரிழப்பு சம்பவங்கள் குஜராத் மாநிலத்தில்தான் நிகழ்கிறது எனவும்” செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை பகிர்ந்து “குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
குஜராத் – 6.25%, மகாராஷ்டிரா – 3.73%, ராஜஸ்தான் – 2.32%, பஞ்சாப் – 2.17%, புதுச்சேரி – 1.98%, ஜார்க்கண்ட் – 0.5%, சத்தீஸ்கர் – 0.35%” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக குஜராத்தில் நாளொன்றுக்கு 400 பேர் கொரோனாவாள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 24,104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு கடுமைபடுத்தப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி மறுத்துள்ளார்.
Covid19 mortality rate:
Gujarat: 6.25%
Maharashtra: 3.73%
Rajasthan: 2.32%
Punjab: 2.17%
Puducherry: 1.98%
Jharkhand: 0.5%
Chhattisgarh: 0.35%Gujarat Model exposed.https://t.co/ObbYi7oOoD
— Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2020